விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
    கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*
    மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
    சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவன் குலம் மகற்கு இன் அருள்  கொடுத்தவன் இடம் - அவளது சிறந்த மகனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு நல்ல க்ருபை பண்ணின பெருமான் வாழுமிடமாவது;
மிடைந்து - ஒன்றோடொன்று நெருங்கி
சாறுகொண்ட - ரஸமயமா யிருக்கிற
மெல் கரும்பு இள கழை - மெல்லிய கரும்பின் இளந்தடிகளானவை
தகை விசும்பு உற - (தங்களை விம்மி வளரவொட்டாமல்) தடை  செய்கின்ற ஆகாசத்தைக் கிட்டி    வளர்ந்திருப்பதனால்

விளக்க உரை

குலமகற்கு = ‘குலம்’ என்ற சொல் சிறப்புப் பொருள் பெறும். மகன் +கு; மகற்கு. தகை விசும்பு = வினைத்தொகை; தகைகின்ற விசும்பு. இது அதிசயோக்தி.

English Translation

The Asura king Hiranya cultivated hate and anger. The Lord tore apart his chest and graced his good son. He resides in Tiruvayindirapuram where tender sugarcane shoots grow densely reaching the sky, giving shade to wetlands which exude beauty.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்