- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துள் ஊறிய தேன்” என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும், 2. “போந்ததென் னெஞ்சென்னும் பொண்வண்டு உனதடிப்போதிலொன் சீராந் தெளிதேனுன்டு அமர்ந்திடவேண்டி” என்கிறபடியே ஆசார்ய பாதர விந்த ஸேவை யாகிற மதுவைப் பருகுதலையே விரதமாக வுடைத்தாகியும், ஊர்த்த்வகதிக்கு ஸாதநமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கரிமஞ்ஞாநங்களை யுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர் களை வண்டாகச் சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவத் பாகவத போக்யதைகளை அநுபவித்த ஆநந்தத்திற்குப் போக்குவீடாக, 3. “பண்கள் தலைக்கொள்ளப்பாடி” என்கிறபடியே நாரதமுனிவர் திருப்பாணாழ்வார்தம்பிராம்மார் முதலானாரைலப் போலே இசைபாடுவ துண்டாகையாலே”இன்னிசை முரன்றெழும்” என்றது.
English Translation
The lord who came as a boar and lifted the cool Earth on his tusk teeth reclines in the deep ocean. He also resides in Tiruvayindirapuram where bees in large numbers drink the nectar from lotus flowers, sing and dance, then fly to their hives on the tall Serundi trees in the dense groves around the temple.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்