விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*  கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்* 
  பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*  பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
  மறை வளர புகழ் வளர மாடம்தோறும்*  மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத* 
  சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கறை வளர் - (ரத்த மாம்ஸங்களின்) கறை ஏறிக்கிடக்கிற
வேல் - வேற்படையையுடைய
கரன் முதலா - கரன் முதலாக
கவந்தன் வாலி - கபந்தவனும் வாலியும்
கணை ஒன்றினால் மடிய - ஓர்அம்பாலே முடியும்படி (செய்தவனும்)
இலங்கை தன்னுள் - லங்காபுரியிலே

விளக்க உரை

ஒண் தொளியனைத்தும்®வடமொழியில் ‘ ப்ரதோளி ‘ என்றொரு சொல் உண்டு வீதி என்று பொருள். ரத்த்யா ப்ரதோளிர்விசிகா. என்பது அமரகோசம். அச்சொல்லில் ப்ர என்னு முபஸர்க்கம் நீங்கி, ‘தோளி’ என்பது தொளி யென்று குறுக்கல் விகாரம் பெற்றிருக்கிறது இங்கு. (வாரமோத.) வேதமோதுமவர்களின் அத்யயந முறைமைகள் பலவகைப்பட்டிருக்கும்: அவ்வகைகளுள், வாரஞ் சொல்லுவதென்பது ஒன்று: அதாவது அநுவாகத்தின் அடியையோ பஞ்சாதியின் அடியையோ ஒருவர் எடுத்துக் கொடுத்துப் பதபாடம் சொல் என்றால் மயங்காமல் ஏற்றக் குறைவின்றி இருநாற்றைம்பது பதங்கள் சொல்லி நிறுத்தலாம். சிறை என்னுஞ் சொல்லுக்குப் பலபொருள்களுண்டு: ஜலப்ராந்த மென்னும் பொருளை இங்குக் கொள்க.

English Translation

The sharp speared Khara-Dushana, Kabandha, Vali, and others were destroyed by arrows. Then in the city of Lanka, the Rakshasas with their crescent teeth, and their king Ravana, were wiped out by our lord. In every home the sounds of Vedic sacrifices and worship rise like a crescendo, while in the Mandapas, in every half-open space students sit and learn the chants. The breeze caresses the watered groves and blows over the town. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்