விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*  தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை* 
  ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*  அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
  கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*  குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்* 
  தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாங்க அரு போர் - ஒருவராலும் தாங்க முடியாத (கொடிய) யுத்தம் நடந்தவல்ல
மாலி - மாலியென்னுமரக்கன்
பட - முடியும்படி
பறவை - கருடனை
ஊர்ந்து - (போர்க்களத்தில்) நடத்தி (மாலியைக் கொன்றொழித்து)

விளக்க உரை

கண்ணீர் சோர்ந்து அன்புகூருமடியவர்களாவர்---பொய்கையார்பூதத்தார் பேயார் என்கிற முதலாழ்வார்கள்.

English Translation

The Lord plied his Garuda bird and rid the Earth of its unbearable burden of temple Rakshasas. He is the ambrosia for devotees who offer worship with tears in their eyes. In the groves where Kongu, Surapunnai and Karavu trees blossom profusely, bees drink the nectar and sing in unison. Hearing the sweet songs the sugarcane in the fields grow a node taller. I have seen him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்