விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்*  குழாம்கொள் பொய்கைக்*  கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி* 
    அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*  அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை* 
    எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*  இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட* 
    செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பொருகால்.
கொழுந்து - தளிர்களையும்
அலரும் மலர் - விகஸிக்கின்ற புஷ்பங்களையுமுடைய
சோலை குழாம் கொள் பொய்கை - சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே
கோள் முதலை - வலிவுள்ள முதலை

விளக்க உரை

இரண்டாமடியில் , ‘அந்தரமேவர” என்பதை ,’அந்தரம் மேவர’ என்றுபிரிக்க. மே----வினைப்பகுதி: ‘வா’ என்பது துணைவினை: மேவ என்றபடி. மேவுதலாவது இடமடையும்படி நிரம்பியிருத்தல். கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய எம்பெருமான் எழுந்தருளினபோது ஆகாசம் இடமடையும்படி யெழுந்தருளினானென்றது. அவனெழுந்தருளின பெருமையைச் சொன்னபடி. பின்னடிகளால் திருக்கோவலூரின் வயல்வாய்ப்பையும் பொழில்வாய்ப்பையும் வருணிக்குமாழ்வார், அவ்வுரை ஒரு பொற்களரியாக உருவகப்படுத்தி வருணிக்கிறார்: (பொற்களரியானது---தட்டானுடைய காரியச்சாலை) அது எப்படியிருக்குமென்றால், அங்கே கரிகள் கொட்டப்பட்டு நிரம்பியிருக்கும்: பொன்களும் முத்துக்களும் நிறைந்திருக்கும்: நெருப்பு ஜ்வலித்துக் கொண்டிருக்கும். இங்கே, கருநீல மலர்கள் கரியாகவும், புன்னைமொக்குகள் முத்தாகவும், புன்னைப்பூக்கள் பொன்னாகவும், தாமரைப்பூக்கள் நெருப்பாகவும் திகழ்வனவாம்;.

English Translation

In the lake amid fragrant bowers the crocodile with strong griping jaws held the elephant by his foot. To save the suffering devotee, our Lord came with his discus and showered his grace. The blue water lilies display his dark hue, the Punnai trees show his pearly teeth and golden hue, the red lotuses in the tank blossom like lamps, I have seen him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்