விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன நாள் - முன்னொருகால்,
இலகிய நீள் முடி - விளங்காநின்ற நீண்ட கிரிடத்தையுடைய
மாவலி தன் - மஹாபலியினது
பெரு வேள்வியில் - பெரிய யாகத்திலே
மாண் உரு ஆய் - வாமந ரூபியாய் (சென்று)

விளக்க உரை

சலமொடு-‘ஜலம்’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால். மாவலியானவன் தத்தம் பண்ணுதற்காக விட்ட நீர்த்தாரையுடனே என்று பொருளாம்: ‘‘ரு’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால் க்ருத்ரிமவகையினால் என்றதாகிறது. சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே அளந்துகொண்ட க்ருத்ரிமம். பாண்டியராஜனுடைய நகரங்களுள் ஒன்றான கருவுடையும் பல்லவராஜன் வென்று கைக்கொண்டபடியைப் பின்னடிகளில் பேசினாராயிற்று.

English Translation

The Lord who went as a manikin to the sacrifice of the radiant tall-crown Mabali and took the Earth and all as a gift, resides in beautiful Kanchi amid water-tanks. The great Pandya king; - ruler of the vast southern kingdom, who has a strong army and many cities with high wall, - was routed by our Palava king, who comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்