விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
  முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
  பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன நாள் - முன்னொரு காலத்தில்
தாம்பு உடை திண்கை வன் தாள் - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய
களிற்றின் - கஜேந்திராழ்வானது
துயர் - துன்பத்தை
தீர்த்து - போக்கினவனாயும்,

விளக்க உரை

“தென்னவனை” என்றவிடத்து- ஐகாரம் அசை. பாம்புடை-ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொன்று த்வஜமாயிருக்கும்: பல்லவராஜன் நாகலோகத்தளவுஞ் சென்று வந்தவனென்பதற்கு அறிகுறியாக நாகத்தைக் கொடியாகவுடையனாயிருப்பவனாம். (குருவம்சத்து அரசர்களில் துரியோதனன் அரவுநீள்கொடியோன் எனப்படுவன்.)

English Translation

The strong elephant with big feet entered the lake and was saved from the jaws of the crocodile; the serpent kaliyan who spat poison in the river was trampled upon and subdued. Our Lord resides in beautiful Kanchi surrounded by water tanks. The Pandya king of the nectared-grove-and-mountain-like-wall surrounded Southern kingdom was routed by our serpent-ensign Pallava king who comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்