விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
  எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
  பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அண்டமும் - அண்டங்களையும்
எண் திசையும் - எட்டுத்திசைகளையும
நிலனும் - பூமியையும்
அலை நீரொடு - கடல்களையும்
வான் - ஆகாசத்தையும்

விளக்க உரை

“செருவில் வளைத்தான்” என்று கூட்டி அந்வயித்து, செரு---போர்செய்கின்றவில் வில்லை, வளைத்தான் என்றுரைப்பாருமுண்டு. வளைத்தான் என்பதற்கு, சூழ்ந்துகொண்டானென்றும் பொருளுண்டாகையால், சிதறியோட வேண்டும்படி பகைவரை ஆக்ரமித்துக் கொண்டானென்றும் உரைக்கலாம்

English Translation

The Universe, the eight Quarters, the Earth, the ocean, the sky, the fire, the wind and all else were swallowed in a trice by my Lord and master, the resident of beautiful Kanchi surrounded by golden mansions. The Pallava king who wielded his bow to disperse hordes of enemies in war, comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்