விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார்மன்னு நீள் விசும்பும் - மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன
கடலும் - ஸமுத்திரங்களென்ன
சுடரும் - சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன
நிலனும் - பூமியென்ன
மலையும் - குலபர்வதங்களென்ன

விளக்க உரை

விசும்பு, கடல், சுடர், நிலம், மலை முதலான பொருள்கள் உந்திக்கமலத்திலே மன்னியிருக்கையாவது இவற்றுக்கெல்லாம் பிறப்பிடமா யிருக்கை. இத்தால்---உலகங்களைப்படைப்பவனான நான்முகக் கடவுளைப் பிறப்பித்த உந்திக் கமலத்தை யுடையவன் என்பதாகக் கொள்க. உந்தித்தார்--தார்என்று புஷ்பத்துக்கும் பெயர்.

English Translation

The big cloud-bearing sky, the oceans, the orbs, the Earth, the mountains, were created on the Lord’s lotus navel. He resides in the high walled city of Kanchi. The chariot-riding Pandya king was routed by the strong bow-wielding monarch Pallava king, who comes to offer wors. Hip in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்