விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
  வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 
  நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
  அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தஞ்சம் - நிச்சயமாக
என் வளையும் - எனது கைவளைகளும்
இவர்க்கு நில்லா - இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை;
சிந்தித்தேற்கு - நான் ஆராயுமளவில்
நெஞ்சமும் - எனது மனமும்

விளக்க உரை

என்னுடைய கைவளைகளும் என்னுடைய நெஞ்சமும் என் பக்கலில் சிறிதும் தங்குகின்றன வில்லை; அவரிடத்திலேயே சென்று சேர்ந்துவிட்டன; (அதாவது--உடம்பு மெலிந்து மூர்ச்சையுமடைந்தேன் என்றவாறு.) இப்படி என்னிடத்திலுள்ளவற்றையெல்லாம் கொள்ளைகொண்ட பின்பும் ‘ இவளிடத்தில் இன்னமும் ஏதாவது தங்கிகிருப்பதுண்டாகில் அதையும் கொள்வோம்’ என்றெண்ணி என் இ;டையை உற்றுநோக்கி ஏதோவொரு வார்த்தையும் வாய்விட்டுச் சொன்னார்; அவர் பார்க்கிற பார்வையோ கண்ணாலே கொளுத்துவதுபோல் கொடிதாயிராநின்றது; இவர் நம்மை ரக்ஷிக்க வந்தவரா? அல்லதுபக்ஷிக்க வந்தவரா என்று எனக்கு விளங்கவில்லை; இவரார் கொல்? என்று கேட்கவும் எனக்கு அச்சமுண்டாகிவிட்டது; என்னுடைய அச்சத்தைத் தெரிந்துகொண்டு அவர் தாமே ‘என்னை வேற்றுருவாக நினைத்து அஞ்சவேண்டர் நீ அஞ்சவேண்டாதபடி அட்டபுயகரத்திலே எனியனாய் வந்து நிற்கிறவனன்றோ நான்’ என்றார்--என்கிறாள், “என்வளையும் இவர்க்கு நில்ல!” என்றது - இவர்க்காகி, என்னிடத்திலே நில்லா என்றபடி. “இங்கே குடியிருப்பாய் அவர்க்காக வர்த்திக்கின்றனவா யிருந்தன” என்பது வியாக்கியான வருளிச்செயல். - (சத்தியம்) என்ற வடசொல் தஞ்சமெனத் திரிந்தது; உண்மையாக என்கை.

English Translation

My bangles left my hands, seeking his refuge. My heart too became his. He looked hard at my Vanji-like slender waist and opened his mouth to speak a word. The glance he gave was full of sweet poison. I did not know who he was. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!”, he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்