- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
என்முன்னே வந்து தோற்றின பெரியவர் தனியராய் வந்திலர்; நித்யஸுரிகள் சுற்றிலும் சூழ்ந்து வணங்காநிற்க வந்தார்; வாயில் நல்வேதமோதும் வேதியரென்று விளங்கும்படி வேதங்களை ஓதிக்கொண்டு வந்தார்; அருகில் திருமகள் தேவியாகத் திகழ்ந்தனள்; இறாபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன: கருநெய்தற்பூவோ! கடல்தானோ! என்னும்படியான வடிவு தோன்றிற்று; அவ்வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியவேயில்லை: நம்முடைய பிராணண்தான் இங்ஙனே உருவெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கலாம்படி பரமப்ரிதிக்கு இலக்காயிருந்தார். இப்படி நித்யஸுரிகளும் பிராட்டிமாரும் திவ்யாயுதங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் ஸ்பஷ்டமாக விளங்கச்செய்தேயும் இவரை இன்னாரென் றறுதியிடமாட்டாத நான் இவரார் கொல்! என்றேன்; ‘நான் தான் அட்டபுககரத்தேன’; என்றார்--என்கிறாள். மடந்தை--பத்தொன்பது வயதுள்ள பெண்: பொதுவாகப் பெண்பாலுக்கும் பெயராக வழங்கும்:
English Translation
Gods on every side stood and offered worship with Vedic chants, the lady of-the sea Lakshmi was his consort. On that side was the vibrant conch, on this side the dicus. Come to describe his colour, -was he lotus-red, or was he ocean-blue?, -his eyes and his frame sarik deeply into my soul. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram”, he said.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்