- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிடாதே உள்ளிழிந்து எவ்வளவுதூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இப்பெரியவருடைய படிகளொன்றும் தெரிகின்றதில்லை; இவர் இங்குவந்தது ஸ்த்ரிகளுடைய ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்காகவேயாம்; இவருடைய வடிவோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது; இப்படிப்பட்ட இவர் ஆர்? என்றேன்; நான்தான் அட்டபுயகரத்தேன் என்றார்---என்கிறாள். எங்ஙனும் என்ற விடத்துள்ள உம்மையைப்பிரித்து எண்ணில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. அறிகிலம்=அறியகில்லோம் என்றவாறு. ஏந்திழையார்சங்கும் மனமும்நிறைவுமெல்லாம் தம்மனவாகப் புகுந்து ஸ்ரீ ‘ஏந்திழையார்’ என்று பொதுவாக மாதர்களைச் சொல்லுகிறது; அவர்களுடைய சங்கும் மனமும் நிறைவும் தம்மனவாகப் புகுகையாவது -இவரைக்கண்டவுடனே விரும்பினபடி கலவிசெய்யப் பெறாமையாலே உடல் இளைத்துக் கைவளைகள் கழன்றொழியும்படியும், நெஞ்சு இவரிடத்திலேயே பதிந்திருக்கும்படியும் அடக்கத்தை விட்டுப் பதறி மேல்விழும்படியும் செய்து கொள்ளுகை. தம்மன--தம்முடையவை.
English Translation
No matter how much I saw him, I could not identify Him: He entered and took the jewels worn by the maidens, together with their hearts, their calm and all, then displayed his dark form, - the hue of the ocean, the Puvai flower, the Kaya flower, the blue lotus and the dark clouds. Seeing this, who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்