விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெண்கலப் பத்திரம் கட்டி*  விளையாடிக்*
    கண் பல பெய்த*  கருந்தழைக் காவின் கீழ்ப்*
    பண் பல பாடிப்*  பல்லாண்டு இசைப்ப*  பண்டு- 
    மண் பல கொண்டான் புறம்புல்குவான்*  வாமனன் என்னைப் புறம்புல்குவான்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு - முன்னொருகாலத்திலே;
வெண்கலம்  பத்திரம் - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை;
கட்டி - (அரையிற்) கட்டிக்கொண்டு;
விளையாடி - விளையாடி;
பல கண் செய்த - பல பீலிக்கண்களைக் கொண்டு செய்யப்பட்ட;

விளக்க உரை

பத்திரம் - வடசொல்; இலை என்பது பொருள்; வெண்கலத்தாலே இலைவடிவமாகச் செய்து குழந்தையினரையிற் கட்டுதல் முற்காலத்தில் ப்ராஹ்மணர்களின் வழக்கம்போலும். அங்ஙனமே வாமநாவதாரம் செய்த ஸ்ரீவிஷ்ணுவின் தன் திருவரையிலணிந்து கொண்டனனென்க; இனி முதலடியால் கண்ணபிரானது பால்யதசையில் லீலைவகையைச் சொல்லிற்றாகவுமாம். “கண்பலபெய்து” என்று பாடமாகில் கருந்தழை - பீலிப்பிச்சத்தினுடைய பல கண் - பல கண்களையும் பெய்து - தலையில் அணிந்துகொண்டு காலின் கீழ் விளையாடி - சோலைநிழலிலே விளையாடியென்று உரைக்க வேண்டும். பீலித்தழையைத் தலையிலே கட்டுகை ஜாதிக்கு உரிய செய்கையாம். மண் என்ற சொல் ஆகுபெயரால் பூமியைக் காட்டும்; அச்சொல் இங்கு உலகம் என்ற பொதுப்பொருளைத் தந்தது.

English Translation

The little Lord who plays and stands under the shade of trees, with a tuft of peacock feathers on his head and a silver fig leaf on his waist, praised with songs in many modes, came as Vamana then and took the Earth. He will embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்