விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
  முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 
  எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
  அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மலர் மிசை மேல் அயனும் - தாமரை மலரிற் பிறந்து மேன்மை பொருந்திய பிரமனும்
வியப்ப - ஆச்சரியப்படவும்,
மூ உலகும் - மூன்று லோகங்களிலுமுள்ளவர்கள்
முரி திரைமா கடல் போல் முழங்கி - அலையெறிகின்ற பெரிய கடல் போலே (ஸ்தோத்ர) கோஷங்களைச் செய்து கொண்டு

விளக்க உரை

ஒரு பெரியவர் வந்து ஸேவைஸாதித்தார், அப்போதைய நிலைமை இப்படிப்பட்டிருந்ததென்கிறாள் பரகாலநாயகி; சிவனும் பிரமனும் கண்டு ஆச்சரியப்படும்படியாகவும், மூவுலகத்திலுள்ளவர்களும் அலையெறிகின்ற கடல்போல் ஸ்தோத்ர கோஷங்களைச் செய்துகொண்டு வணங்கவும், நெருப்புப் போன்ற உளைமயிர்களோடும் வாள்போன்ற கோரப்பற்களோடுங்கூடி, இரணியன் இருபிளவாம்படியாக நரசிங்கவுருக்கொண்டு தோற்றின இம்மஹாநுபாவர் ஆர்? என்று நான் கேட்டேன்; அதற்கு அவர் “நான் அட்ட புயகரத்தேன்-அட்டபுயகரத்தில் வஸிப்பவன் காண்; ‘ அன்றொருகால் ப்ரஹ்லாதனுக்காக வந்து உதவினமாத்திரமன்று; உனக்கு உதவுகைக்காக இங்கே வந்து ஸமயம் பார்த்து நிற்கிறவனன்றோ நான்’ - என்றார் -என்கிறாள்.

English Translation

Siva who burnt the three cities and Brahma seated on the lotus were baffled; roaring like the waves of the ocean, -the three worlds offering worship with method, - his manes rising like flames and his feline-teeth shining brightly, a lion-like form spread himself before me. Who this could be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்