விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
    என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 
    மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் மாயனே - எம்பெருமானே!
அருளாய் என்னும் - “கிருபை பண்ணவேணும்”. என்று பிரார்த்திக்கின்ற
இன் தொண்டர்க்கு - பரமபக்தர்களுக்கு
இன் அருள் புரியும் - பரம க்ருபையைச் செய்தருள்கின்ற.
இடவெந்தை எந்தைபிரானை - திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக,

விளக்க உரை

கீழ் ஒன்பது பாட்டும் வேற்றுவாயாலே பேசி, இதில் கலியன் வாயொலிகள் என்கையாலே தம்முடைய பக்திப் பெருங்காதலைத் தாமே அந்யாபதேசத்தாலே பேசிக்கொண்டாரென்பது விளங்கும் . “உன் மனத்தா லென்னினைந்திருந்தாய்?” என்று பாசுரந்தோறும் எம்பெருமானை வினவிக்கொண்டேவந்தவர் அகற்கு ஒரு மறுமொழியும் பெறாமல் எங்ஙனே பதிகத்தை முடித்து விட்டார்? என்று சிலர் கேட்கலாம்; மறுமொழி பெற்றே முடித்தாரென்றுணர்க. “என்னினைந்திருந்தாய்?” என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி “நீர் கவலையற்றிரும்; உம்மை நாம் கைவிடுவோமோ? உம்மிடத்தில் பரிபூர்ணக்ருபை செய்வதாகவே திருவுள்ளம்பற்றி யிருக்கிறோம். இல்லையாகில் அங்குநின்றும் இங்குவந்து திருவிடவெந்தையிலே நிற்போமோ! அஞ்சாதே கொள்ளும், உமக்கு அருள்புரித்தோம்’ என்று எம்பெருமான் சோதிவாய் திறந்து அருளிச்செய்ததுகொண்டு தேறுதலடைந்து இத்திருமொழியைத் தலைரக் கட்டினரென்பது “அருளாயென்னு மின்தொண்டர்க்கின்னருள்புரியு மிடவெந்தை யெந்தைபிரானை” என்றவிதனால் நன்கு விளங்காநின்றதிறே.

English Translation

This garland of songs by spear-wielding kaliyan, king of high wall mansioned Mangai tract, on. Idavendai Lord who graces his devotees, coming in the forms of his Avatars of the – ure white swan, and the fish and the turtle, and the terrible man-lion then, those who can master it will break the cords of karma binding all in their daily acts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்