விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
    அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 
    மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
    என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொரு கயல் கண் துயில் மறந்தாள் - ஒன்றோடொன்று போர் செய்கிற இரண்டு மீன்கள் போன்ற கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
உன் மேல் - உன் விஷயத்திலே
அன்பினால் - ஆசையினாலே
ஆதரம் பெரிது - ஆதரவு பெருகிச் செல்லுகின்றது;
இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் - இப்பெண்ணுக்கு உண்டான வியாதியை அறிகின்றே னில்லை;

விளக்க உரை

பசலை நிறத்தைப்பற்றி குறுந்தொகையில்; ஒரு செய்யுளுண்டு. அதாவது-- “ஊருண்கேணி யுன்டுறைத் தொக்க பாசியன்றேபசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.” (399.) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலைநிறம்; தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்; அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலைநிறம் படரும்; ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித் தொடுவுழி - தொட்டவிடங்கள்தோறும். விடுவுழி விடுவுழி--விட்ட விடங்கள் தோறும். பரத்தலான்-வியாபிக்கிறபடியினாலே.) (இவ்வணங்கினுன்குற்ற நோயறியேன்.) எம்பெருமானே! இவளுக்கு இப்படிப்பட்ட மனோவியாதியுண்டானது உன்னுடைய கடாக்ஷ்த்தில் ஆசைப்பட்டா? புன்முறவலில் ஆசைப்பட்டா! திருமேனியோடணைய ஆசைப்பட்டா? என்று நிச்சயிக்க மாட்டுகிறிலேன் என்றவாறு.

English Translation

She has lost her bangle pair, become pale and senseless, her warring fish-like eyes never close, O! Her love for you swells, I cannot decipher what is ailing my precious daughter. Her twin breasts are swollen, her lightning-waist has shriveled more; what is going to happen, how will lit end? Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்