விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
    போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
    மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
    என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சாந்தமும் - கலவைச் சந்தனத்தையும்
பூணும் - முத்துவடத்தையும்
சந்தனும் குழம்பும் - குழம்பான சந்தனத்தையும்
தட முலைக்கு அணியிலும் - (இவள் தனது) பெரிய முலைகளில் அணிந்து கொண்டாலும்
தழல் ஆம் - (அவையெல்லாம்) நெருப்பாகவேயிரா நின்றன;

விளக்க உரை

விரஹகாலத்தில் மாதர்களின் மேனியில் தோன்றும் பசலை நிறத்தைப் பொன்னிறமென்பர் கவிகள். பாசிபடர்ந்தாற்போன்ற நிறம். “வளைகளும் இறை நில்லா” என்பதனால் கைகள் துரும்பாக இளைத்தபடி சொல்லிற்றாம். ஏந்திழையிவளுக்கு = இழை என்று ஆபரணத்துக்குப் பெயர்; ஏந்துதல்-தரித்தல்; தரிக்கப்பட்ட ஆபரணத்தையுடைய இவள் விஷயத்திலே என்றதாயிற்று. இம்மகளை நான் ஆபரணங்களோடே நித்தியமாகக் காணவிரும்பி யிருக்கின்றேன்; உன்னுடைய ஸம்ச்லேஷம் வாய்த்தாலல்லது இந்த விருப்பம் நிறைவேறாதாகையால் இவளோடே ஸம்ச்லேஷித்து என்னை உகப்பிக்கவேணுமென்பது உள்ளுறை. பகவத்குணங்களை அநுஸந்தித்துக் கண்ணும் கண்ணீருமாயிருந்தாலும் மயிர்க் கூச்செறிந்திருத்தலுமே பக்தர்கட்கு ஆபரணமாகையால் ஏந்திழை யென்று அவற்றையுடையரானமை சொல்லுகிறதென்க.

English Translation

Even the Sandal paste, cool pearls and fragrance blaze like the Sun to her hot breasts. The rays of the rising Moon scorch her and she thins, the wail of the sea makes her wail, O! The ruddy-coloured leafy sprouts of mango do make her pale, bangles on her pretty hands do not stay. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்