விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாந்தகம் ஏந்திய*  நம்பி சரண் என்று*
  தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி*  தரணியில்* 
  வேந்தர்கள் உட்க*   விசயன் மணித் திண்தேர்*
  ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாந்தகம் - நந்தகம் என்னும் வாளை;
ஏந்திய - கையிலணிந்துள்ள;
நம்பி - பெரியோனே;
சாண் - (நீ எனக்கு) ரக்ஷகன்;
என்று - என்று சொல்லி;

விளக்க உரை

நாந்தகம் = ‘நந்தகம்‘ என்ற வடசொல் நீண்டுகிடக்கிறது. நம்பி. உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பெயர்; “நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண்பெயராகுமென்ப” என்பது நன்னூல். சரண். ‘சரணம்’ என்ற வடசொற் சிதைவு. தனஞ்சயன் - அர்ஜுநனுக்குமறுபெயர். இது தர்மபுத்ரன் ராஜஸுயயாகம் செய்யக் கோலினபோது பலராஜாக்களையும் வென்று மிக்க பொருளைக் கொணர்ந்ததனாலும் வெற்றியையே செல்வமாக வுடையவனென்ற காரணத்தாலும் வந்த பெயராம். தரணி – பரணி . உட்க (நெஞ்சு) உளுக்கும்படியாக; மணித்தேர் மணிகளமைத்துச் சமைத்ததேரென்றுமாம். உம்பர் - மேலுலகு; அங்குள்ளார்க்கு ஆகுபெயர்.

English Translation

When Dhananjaya knelt saying “O Lord wielding the Nandaka dagger, my refuge!” the Lord drove Arjuna’s mighty chariot in the battlefield and felled many kings victoriously. He will embrace me from behind, the Lord of gods will embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்