விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
  அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 
  வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
  முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடி கமழும் நெடுமறுகின் - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய
கடல்மல்லை தலசயனத்து - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற
அடிகள் - எம்பெருமானுடைய
அடியேநினையும் - திருவடிகளையே தியானிக்கின்ற
அடியவர்கள் தம் - பாகவதர்கட்கு

விளக்க உரை

பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தமென்று பரமயோக்யமாக அருளிச்செய்து வந்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அஹங்காரத்திற்கு மூலகாரணமும் பாகவதசேஷத்திற்குப் பிரதி நந்தகமுமான இஹலோக ஐச்வரியத்தைப் பலனாகச்சொல்வதேன்; என்று நஞ்சீயர்பட்டரைக் கேட்டார்; அதற்கு அவர் ரஸோத்தியாக ஒரு உத்தரம அருளிச் செய்தாராம்; அதாவது -“திருமங்கையாழ்வார் உருவவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐச்வர்யமும் பரம புருஷார்த்தமாய் விட்டதுகாணும்; பணமுள்ள இடங்களிற்சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹயமான ஐச்வரியமும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே” என்றாராம்; அவர் எந்த எந்த பலனை விரும்பினாலும் அந்த அந்த பலன் இவ்வருளிச்செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள்.

English Translation

Big fragrant streets line Kadal Mallai Talasayanam where our Lord resides. The beautiful spear-wielding Kalikanri devotee of those who worship him there, has sung this garland of pure Tamil songs. Those who master it will rule as kings over crowned kings.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்