விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
  உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 
  கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
  தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உழவர் - க்ருஷி பண்ணுகிற உழவர்கள்.
செழு நீர் திரை - அழகிய நீரின் அலைகளையும்
கமலம் மலர் - தாமரை மலர்களையும்
உந்து - தள்ளுகிற
வல் பகட்டால் - வலிய எருதுகளைக்கொண்டு

விளக்க உரை

முதலடியில் “திரையுந்து” என்ற பாடத்திற் காட்டிலும் “திரையுந்து” என்ற பாடம் வியாக்கியானத்திற்கு மிகவும் மிணங்கும். உழவர்கள் கழனிகளை உழும்போது அங்குள்ள தாமரை மலர்களையும் நீர் வெள்ளங்களையும் காலாலே தள்ளிக்கொண்டே வலிய எருதுகளைக் கொண்டு உழுவர்களாம்; அப்படி அவர்கள் உழச் செய்தேயும் முன்னிலும் பின்னிலும் பல மலர்கள் தப்பிப் பிழைத்தெழுந்து பரிமளம் வீசிகின்றனவாம்; அப்படிப்பட்ட வயல்கள் சூழ்ந்த திருக்கடன்மல்லைத் திருப்பதியைத் தொழுவதையே இயல்பாகவுடைய பாகவதர்கள் யாவரோ, அவரையே என்நெஞ்சு தொழக்கடவது என்றாராயிற்று. “உழுநீர்” என்ற அடைமொழி - வயலுக்குமாகலாம், உழவர்க்குமாகலாம். எப்போதும் உழுவதையே இயற்கையாக வுடையராயிருப்பர் உழவர்; வயலும் எப்போதும் உழப்பட்டுக்கொண்டே யிருக்கும். பகடு = எருது. (இது யானைக்கும் பெயராம்.)

English Translation

The farmers drive the bullocks back and forth and till the soil, watered by lotus ponds, spilling the excess lotus with fragrance that wafts over Kadal Mallai Talasayanam. O Heart, worship those who even contemplate his worship there!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்