விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*
    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம் - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை
அழல் ஏற - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும்
வெம் சமத்து - பயங்கரமான போர்க்களத்திலே
கண்டாரை - பார்த்துக்கொண்டிருந்த

விளக்க உரை

அஹங்காரிகளான ஆஸூரப்ரக்ருதிகளின் உடலை நாயும் நரியும் பிடுங்கி தின்னும்படியாகவும், மாதர்களேறியநுபவித்த அவர்களது மார்பை அக்நிபகவானேறி அநுபவிக்கும்படியாகவும் போர்க்களத்திற் செய்த பகவான் நம்முடைய அஹங்காரத்தையும் தொலைத்து நம்மை ஆட்கொள்ளுதற்காகத் திருக்கடன்மல்லையிலே வந்து தரைக்கிடை கிடக்கிறார்; எனக்கு அவர் உத்தேச்யரல்லர்; அவரைக் கொண்டாடிக்கொண்டு போதுபோக்குகின்ற பாகவதர்களே எனக்கும் எனது குலத்துக்கும் உத்தேச்யர்-என்றாராயிற்று.

English Translation

The Lord who defeated enemies in war, -soft natured ones world caress their wide chest, - and made their bodies food for the jackals, or be consumed by fire, resides in Kadal Mallai Talasayanam. Those who rejoice over him are our tutelary gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்