விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 
    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏனத்தின் உரு ஆகி - வராஹரூபியாய்த் திருவவதரித்து
நிலம் மங்கை - பூமிப்பிராட்டியை
எழில் - (முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே
கொண்டான் - (அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும்,
வானத்திலவர் - தேவர்கள்

விளக்க உரை

திருக்கடல்மல்லையில் ஞானப்பிரான் என்ற திருநாமத்துடனே திருக்கோயில் கொண்டிராநின்ற எம்பெருமானை மங்களாசாஸநம் செய்தருளுகிறார் இதில். நிலைமைமாறி அழகு அழிந்திருந்த பூமிப்பிராட்டியின் அழகை மறுபடியும் பழையபடியே நிலை நிறுத்தினான் என்பார் நிலமங்கை யெழில் கொண்டான் என்றார். இரண்டாமடியினிறுதியில் “வரங்கொள்ள” என்று பாடமாகில், தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு என்று பொருளாகுக. ஞானத்தினொளியுரு= ஞானப்ரகாசமே உருவெடுத்து நிற்பவன்; ஞானவொளிமயமான திவ்யமங்கள விக்ரஹமுடையவன்

English Translation

He came as a boar and took the beautiful Dame Earth. The celestials worship him with method and circumambulate him with joy. He is a body of knowledge-light residing in Kadal Mallai Talasayanam by the forest. Those who contemplate him are our masters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்