விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கத்தக் கதித்துக்*  கிடந்த பெருஞ்செல்வம்* 
  ஒத்துப் பொருந்திக்கொண்டு*  உண்ணாது மண் ஆள்வான்*
  கொத்துத் தலைவன்*  குடிகெடத் தோன்றிய* 
  அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கத்தக்கதித்து கிடந்த - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த;
பெருசெல்வம் - மிகுந்த ஐச்வர்யத்தை;
ஒத்து - (தன்பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து;
பொருந்திக்கொண்டு - மனம்பொருந்தியிருக்க;
உண்ணாது - அநுபவியாமல்;

விளக்க உரை

கத்தக்கதித்து - “பக்கப்பருத்து” “தக்கத்தடித்து” என்பனபோன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல். ஏறு - ஆகுபெயரால் செருக்கு, நடை, காம்பீர்யம் முதலிய குணங்களால் காளைபோன்ற இளவீரனைக்குறிக்கும்.

English Translation

The Lord took birth to destroy the clan of kings led by Duryodhana, who wanted to rule the Earth by themselves, without sharing their bounteous wealth with their brothers, the Pandavas. He will embrace me from behind, the prize-bull of the cowherd clan will embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்