விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்வழக்கு ஒன்றும் இல்லா*  அணி கோட்டியர் கோன்*  அபிமானதுங்கன்
    செல்வனைப் போல*  திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
    நல் வகையால் நமோ நாராயணா என்று*  நாமம் பல பரவி* 
    பல் வகையாலும் பவித்திரனே*  உன்னைப் பல்லாண்டு கூறுவனே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலே - ச்ரியபதியே;
அல் வழக்கு ஒன்றுமில்லா - அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற;
அணிகோட்டியர் கோன் - அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்;
அபிமாநம்துங்கன் - ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான;
செல்வனைபோல - செல்வநம்பியைப் போலவே;

விளக்க உரை

ஐஸ்வர்யார்த்திகள் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். எம்பெருமானே!அநீதிகளே இல்லாத அழகான திருக்கோட்டியுரிலே வாழ்பவரான செல்வநம்பியைப் போல பழமையான தாசனாக ஆகிவிட்டேன். பரிசுத்தனான எம்பெருமானே அடியேனுக்கு நன்மை உண்டாகும் படி திருமந்திரத்தைச் சொல்லி, தேவரீரின் பல ஆயிர திருநாமங்களைக் கொண்டு தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வேன் என்று கூறுவதாக அமைந்த பாசுரம் ஆகும்.

English Translation

My Lord Tirumal! Like the faultless chief of Kottiyur Selvanambi, a mountain of respectability, I am an old faithful servant of yours, Chanting Namo Narayanaya and other names in myriad ways with all my power, O Pure One, I sing Pallandu to you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்