விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
  நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
  கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
  ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பனி நல் மா மலர் கிழத்தி - குளிர்ந்த சிறந்த தாமரை மலரில் தோன்றிய  ஸ்ரீதேவியும்
நீர் வண்ணன் - கடல்வண்ணனான எம்பெருமானுடைய
மார்வு அகத்தில் - திருமார்பிலும் இடப்பக்கத்திலும்
இருக்கையை - எழுந்தருளியிருக்கும் படியை
முன் நினைந்து - முந்துற அநுஸந்தித்து

விளக்க உரை

இரண்டாமடியில் “நீர்வண்ணன் மார்வத்தில்” என்பது சிலருடைய பாடம்; “மார்வகத்தில்” என்பதே வியாக்கியானத்திற் கிணங்கிய பாடம்; மார்வகத்தில் என்றது - மார்விலும் அகத்திலும் எனப்பொருள்படும். பனிநன்மா மலர்க்கிழத்தியான பெரியபிராட்டியார் மார்வில் இருக்கையையும், பார்வண்ண மடமங்கையாகிய பூமிப்பிராட்டியார் அகத்தில் (- அருகில்) இருக்கையையும் தெரிந்துகொண்டு ‘இனி நாம் நமது குற்றங்கட்காக அஞ்சவேண்டிய காரணமில்லை’ என்று தைரிய முடையராய் அப்பெருமானது ஊராகிய திருக்கடல்மல்லையைத் தியானிப்பவர்கள் எமக்குத் தலைவர் என்றாயிற்று.

English Translation

Those who contemplate the fair Dame Earth’s presence by the ocean hued Lord, and the dew fresh lotus dame Lakshmi’s presence on the chest of the cloud hued Lord, and recall his presence in Kadal Mallai Talasayanam, are our masters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்