விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நமர் - நம்முடையவர்களே!
இது பேசும் அளவு அன்று - இந்த திவ்யதேசவைபவம் நம்மால் சொல்லி முடிக்கப்போகாது,
பிறர் கேட்பதன் முன் - (இது) நாஸ்திகாதிகளின் காதில் விழுவதற்கு முன்னமே
வம்மின் - வந்து கேளுங்கள்,
அது - அந்த திவ்யதேசமானது

விளக்க உரை

(பேசுமளவன்றிது) நாம் அடைந்து உஜ்ஜீவிப்பதற்குப் பாங்கான திவ்யதேசம் திருநீர்மலை என்று சில அந்தரங்கர்களை யழைத்து ஏகாந்தமாக அருளிச்செய்கிறார். நாமர் என்றது அண்மைவிளி நம்முடையவர்காள்! என்று அந்தரங்கர்களான சில பகவத்விஷயரஸிகர்களை அழைக்கிறபடி. நமர்களே! பிறர்கேட்பதன்முன் வம்மின் – சிறந்த அர்த்தவிசேஷம் நாஸ்திகர்களின் செவியிற்படக்கூடாதாகையால் உங்களுக்கு ஏகாந்தமாகச் சொல்லுகிறேன் வாருங்கள் என்றழைக்கிறார். சொல்லப்புகுவதற்கு முன்னே திவ்ய தேசவைபவத்தைத் தாம் அநுஸந்தித்து “இது பேசுமளவன்று“ என வியக்கிறார். பணியுமவர்களின் தீவினைகள் முழுவதையும் உடனே நாசஞ் செய்யுமதான இத்திவ்யதேசமே நமக்கு உஜ்ஜீவநத்துக்கு உரிய திருப்பதியாமென்றாராயிற்று – முன்னடிகளில்.

English Translation

O Devotees! This is beyond our words! Come, before others hear of this secret. It destroys the woes of those who offer worship. So, that alone is our place of redemption. It is the place where the mindless lowly ones, suffering the prison of the five senses, will never come to worship. It is in the midst of groves where bees sit on fragrant flowers and hum all day. Tirunirmalai is the Lord’s great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்