விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
  அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 
  பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
  நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாமம் பாழ்பட எறிந்து - பேருங்கூட அழந்துபோம்படியாக த்வம்ஸம் பண்ணினவனும்
அது அன்றியும் - அது தவிரவும்,
வென்றி கொள் வாள் - வெற்றி கொருந்திய வாளைத் துணையாகவுடையனாய்
ஆயிரம் நாமம் பகராதவன் - (தன்னுடைய) ஸஹஸ்ர நாமங்களில் ஒன்றையும் சொல்லாதவனாய்
புகழ் வீட முனிந்து - (அவனுடைய புகழ் ஒழியும்படி சீறி

விளக்க உரை

(புகராருருவாகி) ஸ்ரீக்ருஷ்ணாவதார காலத்தில் பேளண்ட்ரகவாஸு தேவன் என்பானொரு அரசன் பிறந்திருந்தான், பல மூடர்கள் திரண்டு ‘நீதான் வாஸுதேவன்‘ என்று அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அவனும் ‘நானே வாஸுதேவன்‘ என்று மயங்கி மார்பு நெறித்துச் சங்கு சக்கரம் கிரீடம் முதலியவற்றைச் செய்வித்து தானணிந்துகொண்டு, தூதனையழைத்து “நீ கிருஷ்ணனிடம் போய் என் பெயரைச்சொல்லி ‘இன்னான் வாஸுதேவனாயிருக்க, நீ அவனுடைய சங்கு சக்கரங்களைத் தரிக்கக்வுடாது, இன்று முதல் விட்டுவிட வேண்டியது, இல்லையாகில் அவனோடு யுத்தஞ்செயது அவனை வென்றாயாகில் தரிக்கலாம்‘ என்று சொல்லவேண்டியது“ என்று சொல்லியனுப்ப, அங்ஙனமே அந்தத்தூதன் வந்து கிருஷ்ணனிடம் அச்செய்தியைச் சொல்லக் கண்ணபிரான் சினமுற்றுப் பெரிய திருவடியின்மீதேறிச் சென்று போர்செய்து அப்பௌண்ட்ரகனைத் தனது திருவாழியினால் தலையறுத்துக் கொன்றொழித்தனன் – என்ற கதையை முன்னடிகளிலருளிச் செய்கிறார். பெளண்டர்கன் க்ருத்ரிமமான சங்குசக்கரங்களைச் செய்வித்து அணிந்து கொண்டதனால் ஒருதேஜஸ்ஸு தோன்றத் பெற்றமைப் பற்றிப் புகராருருவாகி முனிந்தவ னென்றார். அவன் தனக்காக அமைத்துக் கொண்டிருந்த பல நகரங்களையுமு கண்ணபிரான் நீறுபடுத்தினவீறு இரண்டாமடியில் கூறப்பட்டது. ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனை முடித்தமை சொல்வன முன்னடிகள் என்றும் வியாக்கியானித்துருளினர் பெரியார்.

English Translation

The sword-wielding tyrant who would never recite the chant of thousand names, and would never bow in worship was no match to our Lord. When his anger rose and he lost his poise, the Lord took the form of a terrible man-lion, and tore asunder his chest. His city was destroyed and his name was heard no more. Tirunirmalai is the Lord’s great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்