விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆர் பார் உலகும் - விசாலமான பூலோகமும்
பனி மால் வரையும் - குளிர்ந்தபெரிய மலைகளும்
கடலும் - ஸமுத்ரங்களும்
சுடரும் - சந்திர ஸூரியர்களும்
இவை - ஆகிய இவற்றையடங்கலும்

விளக்க உரை

(பாராருலகும்) திருநீர்மலையிலுள்ள பெருமான் எப்படிப்பட்டவனெனில், “உலகமுண்ட பெருவாயன்“ என்றபடி உலகிலுள்ள பதார்த்தங்களெல்லாவற்றையும் வயிறுநிறைய அமுதுசெய்தும் இன்னமும் இப்படிப்பட்ட உலகங்கள் பல்லாயிரம் உள்ளே யடங்கும்படி இடமுடையவன், இருபத்தொரு தலைமுறையளவும் நிலவுலகில் க்ஷத்ரியப்பூண்டு வேரறும்படி களைந்தொழிந்த பரசுராம முனிவரனாக அவதரித்தவன், தனக்கு மேற்பட்டா ரொருவருமில்லையென்னும்படி பெருமையின் மேலெல்லையிலே நிற்குமவன், நீர்வண்ணனென்று திருநாமமுடையவன், இப்படிப்பட்ட ஸர்வேச்வரனுக்கு உறைவிடம் திருநீர்மலை.

English Translation

After swallowing the Earth, mountains, oceans, the orbs and all else, the Lord stood saying, “I am hungry”, He is the ascetic king who destroyed the twenty one crowned kings and became the one without a second. He is the ocean-hued Lord, the first-cause Lord. Tirunirmalai is His great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்