- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் பலராமனாகத் திருவவதரித்தபோது கலப்பையை ஆயுதமாகக் கொண்டருளினனென்க. ‘ஹலாயுதன்’ என்றிறே பலராமனது திரு நாமம். கலப்பையென்னும் பொருள்தான் ஹலம் என்ற வடசொல் இங்கு அலமெனத் திரிந்தது. புலமன்னு வடம்புனை கொங்கையினாள் = திருமடந்தைபோலே மண்மடந்தையும் எம்பெருமானுக்குத் திவய்மஹிஷியாதலால் இங்ஙனே சிறப்பித்து வருணிக்கப்பட்டாள். புலம்மன்னுவடம் = கண்ணும் மனமுமாகிற இந்திரியங்கள் வேறு பொருள்களிற் செல்லாது தன்னிடத்திலேயே பொருந்தியிருக்கப் பெற்ற முத்து வடம்; எனவே, மநோஹரமான முத்துவட மென்றதாயிற்று. பாரதயுத்தத்தில் எண்ணிறந்த ஆண்பிள்ளைகள் முடிந்தமை பற்றி ஆளடுவாளமர் எனப்பட்டது.
English Translation
On his beautiful frame he bears a sharp discus, a plough, and a terrible coiled conch. Then is the yore, he came to rid the jeweled Dame Earth of her burden. With his radiant discus he shaded the sun and waged a war in which many kings were killed. As a crowned king he ruled the Earth for many ages. Tirunirmalai His great hill abode.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்