விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
    மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 
    சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
    குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் குட்டன் - என் பிள்ளை;
வட்டு நிடுவே - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே;
வளர்கின்ற - வளர்த்துக் கொண்டிருப்பதான;
மாணிக்கம் மொட்டு - இந்திர நீலமயமான அரும்பினுடைய;
நுனையில் - நுனியில்;

விளக்க உரை

‘வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு’ என்றது - கண்ணபிரானது குறியை யென்க. (குறி - ??? தவயவம். ) நிறத்தாலும் ஆகாரத்தாலும் உவமை. ‘முளைக்கின்ற முத்து’ என்றது - அதில் நன்று வெளிவருகிற சிறுநீரை. உபமேயத்தைச் சொல்லாது உபமாநத்தை மாத்திரம் சொல்லி அதனால் உபமேயத்தைப் பெறவைத்தது - இடக்கரை அடக்கவேணுமென்ற கருத்தினாற்போலுமென்ப. சிறுநீர்த் துளிகள் இற்று இற்று மீண்டும் வருதலால் ‘சொட்டுச் சொட்டெனத் துளிக்கத் துளிக்க’ என்றார். என்னை - உருபு மயக்கம். புல்குவான் - அணைத்துக் கொண்டபடியைச் சொல்லுகிறது; இனி ‘அணைத்துக் கொள்வானாக’ என்று விரும்பினதாகவுங் கொள்ளலாம்.

English Translation

Like a jewel bud between two balls, his pensile organ dripping with piss, my little one will come and embrace me from behind, my Govinda will embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்