விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*
    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரதனும் - பரதாழ்வானும்
தம்பி சத்துருக்கனனும் - அவனது தம்பியான சத்ருக்நாழ்வானும்
இலக்குமனோடு - லக்ஷ்மணணும்
மைதிலியும் - ஸீதாபிராட்டியும்
இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற - இடைவிடாது தோத்திரம் பண்ணும்படியாக எழுந்தருளியிருக்கிற

விளக்க உரை

English Translation

Surrounded by his brothers Bharata, Shatrughna, Lakshmana and his wife Sita, night and day worshipped by them, my Lord, Ravana’s vanquisher, resides in the cool fragrant bowered groves where cuckoos sing and peacocks dance, and sunrays find it difficult to penetrate the leaf canopy. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்