- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திட தளர்ந்து*
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்* எம் பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
காணொளி
பதவுரை
இந்திரனுக்கு என்று - இந்திரனை உத்தேசித்து
ஆயர்கள் எடுத்த - இடையர்களால் நடத்தப்பட்டு வந்த
எழில் விழவில் - சிறந்த உத்ஸவத்திலே
பழநடை செய் - அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற
மந்திரம் விதியில் பூசனை பெறாது - ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல்
விளக்க உரை
திருவாய்ப்படியில் வருஷந்தோறும் இந்திரனுடைய பூஜை பெரிய திருவிழாவாக நடத்தப் பட்டு வந்தமையால் எழில்விழவு எனப்பட்டது. மந்திரவிதி = வேதத்துக்கு அநதிகாரிகளான இடையர்களுக்கு மந்திர விதியுண்டோ வென்னில்; இங்கு மந்த்ரமாவது ஆலோசனை; அதாவது ஸங்கேதம்.
English Translation
When the great feast,-that the cowherds used to offer with chants from yore,-was not forthcoming, Indra rained hailstones, which made the cowherds lose heart and seek Krishna for protection, whereupon our Lord held aloft the matchless Govardhana mountain, and stopped the rains. I have seen Him in Tiruvallikkeni.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்