விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 
    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வஞ்சனை செய்ய - கபடமாகக் கொல்வதற்காக
தாய் உரு ஆகி வந்த - தாய் வடிவு கொண்டுவந்த
பேய் - பூதனை யென்னும் பேய்ச்சி
அலறி - கதறிக்கொண்டு
மண் சேர - தரையிலே விழும்படியாக

விளக்க உரை

(விஞ்சைவானவர் இத்யாதி.) திருமால் தேவர்களுக்காகச் கடல்கடைந்த காலத்து தந்வந்தரியென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீர ஸமுத்ரத்தினின்றும் தோன்றியபொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள அந்த எம்பெருமான் ஜகந்மோஹநகரமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர்கட்கு ப்ரஸாதித்தனன். இந்த அற்புத சக்தியைக்கண்டு தேவ வாக்கத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டுத் துதிசெய்தனர்; இதனைப் பின்னடிகளில் அநுஸந்தித்தாராயிற்று. விஞ்சை-வித்யா; வித்யாதரர், சாரணர், ஸித்தர் என்பவர்கள் தேவதைகளின் வகுப்பிற் சேர்ந்தவர்கள. “வியந்து துதி செய்ய” என்ற சொற்கள் வியந்துதிசெய்ய எனப் புணர்ந்தன. ‘சங்கு கதை’ சங்கதை போல. “வியந்து துதி செயப் பெண்ணுருவாகி” என்றும் பாடமுண்டு.

English Translation

With evil intentions, the ogress came disguised as a mother, but fell to the ground writhing in pain when the Lord sucked her poison breast and her life with it. He is like death unto Asuras; he is worshipped by Siddhas, Charanas and Vidyadharas. He came in the form of a beautiful dame and gave ambrosia to the gods. I have seen him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்