விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
  அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 
  மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
  நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அச்சோ வருக என்று உரைத்தன - ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை;
மச்சு அணி - பல நிலைகளால் அழகிய;
மாடம் - மாளிகைகளையுடைய;
புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு;
கோன் - நிர்வாஹகரான;

விளக்க உரை

முன்பு யசோதைப் பிராட்டிக்குக் கண்ணெதிரே நின்று கண்ணபிரான் எப்படி ஸேவை தந்தருளினனோ அப்படியே இப்போது தமக்கும் ப்ரயக்ஷமாக ஸேவை தந்தருளினதுபற்றி “நச்சுவார் முன்றிகும் நாராயணன்” என்றார். அடிவரவு:- பொன் செங்கமலம் பஞ்சவர் ஊறிய கழல் போர்மிக்க என்னிது கண் துன்னிய நிச்சு வட்டு.

English Translation

These words of high mansioned Puduvai town’s king Pattarbiran recall the “Acho-come-to-me” songs of Yasoda addressed to Narayana who appears before loving devotees. Those who sing it always will rule over the wide skies.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்