விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி*  திசைமுகனார்* 
  தங்கள் அப்பன் சாமி அப்பன்*  பாகத்து இருந்த*
  வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்*  சூழ் கழல் சூடநின்ற* 
  எங்கள் அப்பன் எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திங்கள் ஆகி - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும்
அப்பு வான் எரி கால் ஆகி - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும்
திசைமுகனார் தங்கள் அப்பன் - பிரமனுக்குத் தந்தையாயும்
சாமி அப்பன் - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும்
பாகத்து இருந்த - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய்

விளக்க உரை

சாமியப்பன் = ‘ஸாமி’ என்ற வடசொல் சாமியென்று கிடக்கிறது. பகவத் கீதையில் “வேதாநாம் ஸாமவேதோஸ்மி” என்று “வேதங்களுக்குள்ளே நான் ஸாமவேதமாகிறேன்” என்றருளிச் செய்தமைக்கிணங்க, ஸாமவேத ப்ரதிபாத்யனான பகவான் என்கை. (பாகத்திருந்த இத்யாதி.) வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்காதீர்த்தத்தையும் ஜடையிலே உடையனாய்த் திருமேனியின் ஏகதேசத்திலே உறைகின்ற சிவபெருமான் தனது தலையாலே சுமக்கின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் திருவெவ்வுளுரிலே திருக்கண் வளர்ந்தருளா நின்றான். சூழ்கழல் = உலகங்களையெல்லாம் சூழ்ந்த திருவடி; உலகளந்ததிருவடி.

English Translation

The four faced Brahma who bears the sky, Air, Water, Fire and the Moon worships the Vedic Lord as his father. The lord Siva with mat-hair-Ganga on his head, who wears a nectar-dripping Konrai garland,-also worships our Lord’s feet. He reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்