விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சோத்தம் நம்பி என்று*  தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்* 
    ஆத்தன் நம்பி செங்கண் நம்பி*  ஆகிலும் தேவர்க்கு எல்லாம்* 
    மூத்த நம்பி முக்கண் நம்பி என்று*  முனிவர் தொழுது* 
    ஏத்தும் நம்பி எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டர் - அடியவர்கள்
மிண்டி - நெருக்கமாகத் திரண்டு
நம்பி சோத்தம் என்று  தொடர்ந்து அழைக்கும் - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற
ஆத்தன் - ஆப்தனான
நம்பி - ஸ்வாமியாய்

விளக்க உரை

அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தவிசேஷம் சோத்தம் என்பதாம்; ‘ஸ்தோத்ரம்’ என்ற வடசொல் சோத்த மெனச் சிதைந்து கிடக்கிறது என்பாருமுளர். ஆப்த: என்ற வடசொல் ஆத்தனெனத் திரிந்தது; நம்புதற்குரியவ னென்கை.

English Translation

The dear Lord whom devotees throng and incessantly call, “our Lord”, is the lotus-eyed lord, who is also the elder Lord of the celestials, the lord worshipped by the three-eyed Lord and the four-faced lord. He reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்