விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் ஓர் தூது*  வானரத்தின் வாயில் மொழிந்து*  
    அரக்கன் மன் ஊர் தன்னை*  வாளியினால் மாள முனிந்து*
    அவனே பின் ஓர் தூது*  ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்* 
    இன்னார் தூதன் என நின்றான்*  எவ்வுள் கிடந்தானே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - ஸ்ரீராமாவதாரத்திலே
வானரத்தின் வாயில் - சிறிய திருவடி மூலமாக
ஓர் தூது மொழிந்து - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு)
அரக்கன் - இராவணனுடைய
மன் ஊர்தன்னை - சிறந்த லங்காபுரியை

விளக்க உரை

“ சக்ரவர்த்தி திருமகனார்க்கு எல்லா ஏற்றமுமுண்டேயாகிலும் ஆச்ரிதர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோன ஏற்றமில்லையே; அந்த ஏற்றம் கண்ணபிரானுக்கேயன்றோ வுள்ளது” என்றார்; அதை பட்டர் கேட்டருளி, “ ஓய், குணக்கடலாகிய இராமபிரானுக்குத் தூதுபோதல் அநிஷ்டமன்று காணும்; இக்ஷ்வாகு வம்சத்திலே ஸார்வ பௌமனாகப் பிறந்தானாகையாலே மஹாராஜன் கழுத்திலே ஓலையைக் கட்டித் தூதுபோக விடுவாரைக் கிடையாமையாலே இராமன் தூதுபோகப் பெற்றிலனத்தனை; அந்த அவதாரத்திலே திருவடி அங்குமிங்கும் போவது வருவதாய்க் கொண்டு தூதக்ருத்யஞ்செய்து வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு ‘நாமும் இப்படி ஆச்ரிதர்களுக்காகத் தூது போகப் பெற்றிலோமே’ என்று திருவுள்ளம் குறைபட்டு அக்குறை தீருகைக்காகவே பின்னை இழிகுலத்திலே வந்து பிறந்து தூதுசென்றான்; க்ஷத்ரியனென்று நிச்சயிக்கில் தூதுபோகவிட மாட்டார்களென்று அத்தை மறைத்து வளர்ந்தான் காணும்; அபிஷிக்த க்ஷத்ரிய குலத்திலே பிறந்தால் ‘தூதுபோ’ என்று ஏவ ஒருவர்க்கும் நா எழாதிறே” என்றருளிச் செய்தாராம். இதற்கு இப்பாசுரம் மூலமாயிருக்கும். “இன்னார் தூதனெனப்பட்டான்” என்னாமல் “இன்னார் தூதனென நின்றான்” என்கையாலே, பாண்டவ தூதனென்று பேர்பெற்ற பின்புதான் எமபெருமானுக்குத் தரிப்பு உண்டாயிற்றென்பது விளங்கும்.

English Translation

Earlier he sent a message through the monkey Hanuman, and destroyed Lanka, the fortressed city of the demons, with hot arrows. Later he himself took a message from the Pandavas and became derided by the kauravas as ‘messenger’. He reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்