விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
    மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  
    பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
    அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
     அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னிய - நித்யஸித்தமான;
நால் மறை - சதுர்வேதங்களும்;
முற்றும் - முழுவதும்;
மறைந்திட - மறைந்துவிட (அதனால்);
அன்னிய - நெருங்கிய;

விளக்க உரை

முன் ஒரு கல்பத்தின் அந்தத்தில் சதுர்முகன் துயிலுகையில் அவன் முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக் கொண்டிருந்த நான்கு வேதங்களையும் மஹாபலிஷ்டனாய் அருந்தவங்கள் செய்து பெருவரங்கள் பெற்ற சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு ப்ரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல அதனையுணர்ந்து திருமால் ஒரு பெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங் கடலினுட் புக்கு அவ்வஸுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து ஸாரத்தையும் அஸாரத்தையும் பிரிக்குந் தன்மையுள்ள ஹம்ஸமாய்த் தோன்றிப் பிரமனுக்கு உபதேசித்த வரலாறு காண்க. நான்மறைகளாவது - ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன; இவை வேதவ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால் அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும். அன்னம் - ஹம்ஸம் என்பதன் விகாரம். அருமறைதந்தானே என்ற பாடத்தில் தளைதட்டுதலால் ஆர்மறை தந்தானே என்று பாடமோதுவது ஒக்குமென்பர்: ஆர் = அருமை என்ற பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டு இடையுகரமுங்கெட்டு ஆர் என நிற்கும். (ஈறுபோதல். . . ஆதிநீளல் இத்யாதி. )

English Translation

When eternal darkness enveloped the world and the timeless Vedas fell into oblivion, you came as a swan, bequeathed the Vedas and rid the world of darkness! Come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்