விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தையலாள்மேல் காதல் செய்த*  தானவன் வாள் அரக்கன்* 
    பொய் இலாத பொன் முடிகள்*  ஒன்பதோடு ஒன்றும் அன்று* 
    செய்த வெம் போர் தன்னில்*  அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள* 
    எய்த எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தையலாள்மேல் - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே
காதல்செய்த - காமம் கொண்ட
தானவன் - ஆஸூரப்ருக்ருதியாய்
வாள் - வாளாயுதத்தை யுடையவனான
அரக்கன் - இராவணனுடைய

விளக்க உரை

பொய்இலாத பொன்முடிகள் = தலைகட்குப் பொய்யில்லா மையாவது -தனது மாயச்செயல் வல்லமைக்கிணங்க மாயாரூபமான தலைகளைக் காட்டிவிட்டு மெய்யான தலைகளைக்கொண்டு தப்பிப்பிழைத்தா னென்கையன்றியே உண்மையான தலைகளுக்கே அறுப்புண்டானென்கை. திசைகளெங்குந்திரிந்து வெற்றிபெற்று வீராபிஷேகம் விஜயாபிஷேகம் என்று செய்து கொண்ட அபிஷேகங்களில் சிறிதும் பொய்யின்றியே உண்மையான ஏற்றமுடைய கிரீடங்கள் பத்தும் உருள என்னவுமாம்.

English Translation

The Lord felled the ten gold crowns of the sword-wielding Rakshasa king Ravana in a fierce battle, raining hot arrows over his heads. He is our Lord reclining in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்