விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
    நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 
    வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
    ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காசை ஆடை - காஷாய வஸ்த்ரத்தினால்
மூடி - உடம்பை மறைத்துக்கொண்டு
ஓடி - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து
காதல் செய்தானவன் - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய
ஊர் - ஊராகிய இலங்கையானது

விளக்க உரை

முன்னிரண்டடிகளால் ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தையும், பின்னிரண்டடிகளால் ஸ்ரீக்ருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்தித்து, இப்படி ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளின பெருமான்றானே திருவெவ்வுளூரிலே வந்து சாய்ந்தருளா நின்றானென்கிறார். காஷாயம் என்ற வடசொல் காசையெனத் திரிந்தது. தானவன்-ஆஸூரப்ரகிருதி.

English Translation

Our Lord decided to destroy the city of Ravana who came disguised as a russet cloth mendicant and sought to make love to Sita. Our very same Lord was also the laughing stock of cowherd girls with bamboo-slender arms, when he was caught stealing butter. He is the Lord reclining in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்