விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
  பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 
  ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
  வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கூடி - உலகத்தாரோடே கூடி
ஆடி - அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி,
உரைத்ததே உரைத்தாய் - அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த
என் நெஞ்சம் என்பாய் - என் மனமே!

விளக்க உரை

“கூடியாடி உரைத்ததே உரைத்தாய்” என்றவிது தமது நெஞ்சின் பூர்வாவஸ்தையைச் சொன்னபடி. (தம்முடைய பூர்வாவஸ்தையையே கூறியவாறு.) நெஞ்சே! நீ நேற்றுவரை எப்படி போதுபோக்கித் திரிந்தாய்!; இன்று எப்படியானாய்! என்று ஆச்சரியம் தோற்ற அருளிச் செய்கிறார். விஷயாந்தரங்களிலே மண்டித்திரிகிற ஸம்ஸாரிகளோடே கூடியும், அவர்கள் அநுபவிக்கிற விஷயங்களையே அநுபவித்தும், அவர்கள் பேசுகிற பேச்சுக்களையே பேசியும் போந்தாயன்றோ நீ நேற்று வரையில்; இப்படியிருந்த நீ இன்று திடீரென்று எப்படிப்பட்ட நிலைமைக்கு வந்துவிட்டாய்!; நீ பெற்ற பாக்கியம் நீ அறிகின்றிலையாகையால் நான் எடுத்துச் சொல்லுகிறேன், அன்புடன் கேளாய் நெஞ்சமே!; பக்திக்குப் போக்குவிட்டுப் பாடியுமாடியும் பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காணமுடியாதவனும், பிரமன் சிவனிந்திரன் முதலான மேலாத் தெய்வங்கள் மேவித்தொழப் பெற்றவனுமான திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழில் பூண்டாய்காண் என்கிறார்

English Translation

O Heart! Joining heretic schools, you repeat what they say. They have expounded many truths they say. They have expounded many truths but none of them has seen the Lord. Our potdancer-Lord resides in Venkatam, his temple is worshipped by Brahma, Siva, Indra and all the celestials. Today you too have entered into his service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்