- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தருக்காவது தர்க்கம்; யுக்திவாதம். கேவலம் யுக்திவாதங்களாலே மதஸ்தாபநம் செய்வது கூடாது; சாஸ்த்ரங்களுக்கு இணங்கிய யுக்திவாதங்களே உசிதமானவை; அங்ஙனன்றிக்கே பிரமாணங்களுக்கு விருத்தமான சுஷ்கதர்க்கங்களாலே தங்கள் மதத்தை உரைப்பராம் சமணர்கள்; அதை அருளிச் செய்கிறார் தருக்கினால் சமண் செய்து என்று. (சோறு இத்யாதி.) சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது- பெருஞ்சோறுண்ணுதல். தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி மிடற்றிலேயிட்டு நெருக்குவர்களாம் நோன்புக்குறுப்பாக; அப்போது படும் கஷ்டம் பொறுக்க முடியாததாம். இப்படி அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டுபூண்டு மகிழப்பெற்றாயே நெஞ்சமே! என்று உகக்கிறார்;. “தெருவில் திரி சிறு நோன்பியர்செஞ்சோற்றோடு கஞ்சிமருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று மேல் ஏழாம்பத்திலே அருளிச்செய்யும் பாசுரமும் இங்குக் குறிக்கொள்ளத் தகும்
English Translation
O Heart! See the distress of the polemic Sramanas who gulp curd-rice down their throats! The Lord resides in Venkatam where bees sing the Marul love-songs around his temple: he is the soul of the sun in the sky. Today you too have entered into his service.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்