விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
  வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 
  வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
  மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சம் என்பாய் - ஓ மனமே!,
இண்டை ஆயின கொண்டு - புஷ்பமாலைகளை ஏந்திக் கொண்டு (தன் பக்கல்வந்து)
ஏத்துவார் - ஸ்தோத்ரம் பண்ணுமவர்களான
தொண்டாகள் - தாஸபூதர்களை
உறவோடும் - அவர்களுடைய ஸம்பந்த ஸம்பந்திகளோடுங் கூட

விளக்க உரை

பலவகைப்பட்ட புஷ்பங்களைக் கையிலேந்திக்கொண்டு துதிக்கவருகின்ற தொண்டர்களையும் அவர்களோடு ஸம்பந்தம்பெற்ற மற்றுமுள்ளாரையும் எம்பெருமான் விஷயீகரித்துப் பரமபதத்திலே கொண்டு சேர்க்கிறான் என்கிற இச்சிறந்த குணத்தைக்கண்டு நெஞ்சே! அத்திருவேங்கட முடையானுக்குத் தொண்டு பூண்டாயே! என்று உகக்கிறார். உறவோடும் வானிடைக் கொண்டுபோயிடவுமது கண்டு = தொண்டர்களாய் ஏத்துகிறவர்களுக்கு மாத்திரமேயன்று மோக்ஷம்; அவர்களோடு ஸம்பந்த ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு முண்டென்கிறார்.

English Translation

O Heart! The Lord accepts those who worship him, with floral garlands, and takes them to his heavenly abode. He resides in Venkatam ruling the Earth from his temple, where bees swarm and sing his glory. Today you too have entered into his service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்