விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
    மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 
    குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
    வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சம் என்பாய் - எனது நெஞ்சே!,
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் - பந்துக்கள் தாயாதிகள் என்று சொல்லக்கூடிய எவ்வகை ஆபாஸ - ஸம்பந்தமுமில்லாத அத்விதீயனான பெருமான்
உகந்தவர் தம்மை - தானுகந்த அந்தரங்கபக்தர்களுக்கு
மண் மிசை பிறவியே கெடுப்பான் அது கண்டு - இப்பூமியில் பிறவியைப் போக்குவானென்கிற தன்மையைக் கண்டு

விளக்க உரை

நெஞ்சமே! திருமலையப்பனுடைய திருக்குணங்களின் வாசியறிந்து நீ அவன் திறத்திலே அடிமைத்தொழில்பூண்டாயே! நாம் பந்துக்களென்றும் தாயாதிகளென்றும் சில ஆபாஸபந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மைசெய்வதும், சிலரை சத்துருக்களென்று கொண்டு அவர்கட்குத் தீமைசெய்வதுமாக இருக்கிறோமே; இப்படியல்ல எம்பெருமானுடைய ஸ்வபாவம். அவன் எப்படிப்பட்டவனென்றால், உறவுசுற்றமென்றொன்றிலாவொருவன்; “ஸூஹ்ருதம் ஸர்வபூதாநாம்” என்றும் “தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யமதிதைவதம்” என்றும் எல்லார் திறத்திலும் வாசியற்ற அன்புடையவனாகச் சொல்லப்படுபவன். இன்னமும் எப்படிப்பட்டவனென்னில்; உகந்தவர் தம்மை மண்மிசைப் பிறவியே கெடுப்பான் = தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களை ஸம்ஸாரத்தில் நின்றும் களைந்தெடுத்து நித்ய ஸூரிகளுடைய திரளிலே நிறுத்துமவன். “அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே” என்று அந்வயம்.

English Translation

O Heart! The Lord has no relatives or friends on Earth, and gladly rids his devotees of their birth. That perfect Lord resides in Venkatam where gypsy women join the chorus of bees in singing love-songs on kurinji Pann. Today you too have entered into his service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்