விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
    மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*
    கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
    மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சமே  - என்னுடைய மனமே!
மா தவம் மானவர் தங்கள் சிந்தை - மிக்க தவஞ் செய்தவர்களான மனிசருடைய நெஞ்சிலே
அமர்ந்து உறைகின்ற எந்தை - பொருந்தி வாழ்கின்ற ஸ்வாமியும்
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி - வேடர்கள் ஸமர்ப்பிக்கும் காரகிலபுகை பரவியிருக்கப்பெற்ற திருமலையிலே வாழ்பவனும்

விளக்க உரை

“என் நெஞ்சமே! நீ வானவர்தங்கள் சிந்தைபோல (திருவேங்கமுடை யானுக்கு) இன்று அடிமைத்தொழில் பூண்டாயே!” என்று உகந்து பேசுகிறார். இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும், இந்த மண்ணோருடைய நெஞ்சு எப்படி துர்விஷயங்களையே சிந்தை செய்கிறதோ அப்படி நீ விஷயாந்தரங்ளைச் சிந்தியாமல், ஒரு நாளும் ஸம்ஸார நாற்றமே கண்டறியாத நித்யஸூரிகளின் நெஞ்சு போலே திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழிலை ஏற்றுக்கொண்டாயே, உன்னுடைய பாக்கியமே பாக்கியம்! என்றவாறு. மேவி = இது வினையெச்சமன்று; மேவியவன் என்னும் பொருளதான பெயர்ச்சொல். இ-பெயர்விகுதி. ‘நாடோடி’ ‘பிறைசூடி’ ‘குதிரையோட்டி’ என்பன காண்க. மாண்குறளான அந்தணற்கு = தன்னுடையதான பூமியைப் பெறுவதற்குத் தான் யாசகனாக வந்து நின்ற பெருமானுடைய குறை தீர, நெஞ்சமே! நீ அவனுடைய வஸ்துவாக அமையப்பெற்றாயே! என்றவாறு மாவலிபக்கல் வந்தபோது வாமநப்ராஹ்மணனாக வந்தமையாலே ‘அந்தணற்கு’ எனப்பட்டது; அன்றி, ‘அந்தணரென்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டொழுகலான்” (திருக்குறள்-30.) என்றபடி அழகிய தண்மையையுடையவன் அந்தணன் என்றதாய், மஹாதர்மிஷ்டன் என்னவுமாம். முதலடியில் “இனிதுவந்து” என்றவிடத்து “இனிது உவந்து” என்றும் ‘இனிது வந்து’ என்றும் பிரிக்கலாம்.

English Translation

O Heart! The Lord resides in the hearts of sages of great austerities, and in Venkatam where the fragrant smoke of Agil, burnt by forester, rises high. In the yore he came as a beautiful Vedic lad. Like the consciousness of the celestials, today you too have entered into his service sweetly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்