விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வில்லார் மலி*  வேங்கட மா மலை மேய* 
  ல்லார் திரள்தோள்*  மணி வண்ணன் அம்மானைக்* 
  ல்லார்  திரள்தோள்*  கலியன் சொன்ன மாலை* 
  வல்லார் அவர்*  வானவர் ஆகுவர் தாமே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வில்லார் மலி - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய - எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள் - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன் - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான

விளக்க உரை

உரை:1

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

உரை:2

திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பதாக வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களா சாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி. பரமபதத்திலும் நித்யஸூரிகள் அஸ்தாநே பயத்தைச் சங்கித்துப் பரியும்போது திருமலையிலே ஸ்ரீ குஹப்பெருமாள்போன்ற வேடர்கள் ‘அஸூரராக்ஷஸமயமான இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று அதிசங்கை பண்ணி எப்போதும் ஏறிட்ட வில்லுங்கையுமாய் இருப்பர்களாகையாலே, அதனை உவந்து ஆழ்வார் அருளிச்செய்கிறாரென்க. பெரியாழ்வார் “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்திவிசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும் அதிசங்கையின் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்றாப்போல, இவரும் * மல்லார் திரடோள் மணிவண்ணனென்று அறிந்து வைத்தும் அதிசங்கையினால் மங்களாசாஸநத்திலே நிஷ்டையுடையராயிருப்பர் என்பது இப்பாட்டில் அறியத்தக்கது.

English Translation

Kaliyan with stone-hard arms sang this garland of songs in praise of the Resident of bow-wielding hunters’ Venkatam hills, the dark-gem Lord with strong arms. Those who can sing it will become celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்