விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேயன் அணியன்*  என சிந்தையுள் நின்ற* 
    மாயன் மணி வாள் ஒளி*  வெண் தரளங்கள்* 
    வேய் விண்டு உதிர்*  வேங்கட மா மலை மேய* 
    ஆயன் அடி அல்லது*  மற்று அறியேனே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேயன் - (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன் - (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன் - என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு - மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள் - பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்

விளக்க உரை

இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப் பிராட்டியோடுங்கூட வந்து புகந்தானான பின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார். எம்பெருமான் சிலர்க்குச் சேயன், சிலர்க்கு அணியன்; சேயனென்றால் தூரத்திலிருப்பவனென்கை; அணியனென்றால் ஸமீபத்திலிருப்பவனென்கை. தன்னை உகவாதார்க்கு அவன்எட்டாதவன்; தன்னை உகந்தார்க்கு அவன் கையாளாயிருப்பவன். துரியோதநாதியர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக் காணலாம். சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை என்னைக் கொண்டறியலா மென்பவர் போல என சிந்தையுள் நின்றமாயன் என்கிறார். என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியனென்பது சொல்லவேணுமா வென்கை. தரளம் = முத்து; வடசொல்.

English Translation

Lord near, Lord afar, wonder-Lord who stays in my thoughts,-he is the resident of mighty Venkatam hills where bamboos burst and spill brilliant gems and lustrous pearls. Other than the lotus feet of the cowherd Lord, I have no refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்