விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னா*  இம் மனிசப் பிறவியை நீக்கி* 
    தன் ஆக்கி*  தன் இன் அருள் செய்யும் தலைவன்* 
    மின் ஆர் முகில் சேர்*  திருவேங்கடம் மேய* 
    என் ஆனை என் அப்பன்*  என் நெஞ்சில் உளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னா - நிலைத்திராத
இ மனிசப் பிறவியை - இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி - போக்கடித்து
தன் ஆக்கி - தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும் - தனது பரமகிருபையைச் செய்கின்ற

விளக்க உரை

“அடியேனிடரைக்களையாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனைநீயே” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் ‘அடியார்களைத் தேடித்திரிகிற நான் இங்ஙனே பிரார்த்திக்கிற உம்மை உபேக்ஷித்திருப்பேனோ?’ என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்;அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அநுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்தவாறே தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகிவிட்டதாகவே நினைத்துப் பேசுகிறார்.

English Translation

My Elephant, my Lord, Resident of Venkatam hills lit by the lightning of dark clouds!-he is my master, he rid me of my lowly mortal birth, made me his, and gave me service to his feet. He is now in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்