விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
    முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*
    மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
    மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
     வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இது - (யாசிக்கும்போதிருந்த வடிவம் மாறியளக்கிற) இது;
என் மாயம் - என்ன மாயச் செய்கை;
என் அப்பன் - என் தகப்பன்;
அறிந்திலன் - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு - நீ யாசிக்கவந்தபோதிருந்த வடிவத்தையே கொண்டு;

விளக்க உரை

நமுசி திரிவிக்கிரமனோடு வெகுநாழிகை வழக்காடி எம்பெருமான் சொன்ன ஸமாதாநங்களைக்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருக்க எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாசத்திலே கொண்டுபோய் சுழன்று விழும்படி செய்த வரலாறு காண். சுழற்றிய என்ற பெயரெச்சம் முடியனைக் கொண்டு முடியும்.

English Translation

When Bali’s son Namushi protested, “What trick is this? My father did not know. You must resume your old form and measure the land”, you hurled him into the sky. O Radiance-crowned Lord of Venkatam, come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்