விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
    மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 
    கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
    அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயனே - ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன் - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன் - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்

விளக்க உரை

பாவமே செய்து பாவியானேன் = “பாவமே செய்தேன்” என்றாவது, “பாவியானேன்” என்றாவது இரண்டத்தொன்று சொன்னால் போராதோ? “பாவமே செய்து பாவியானேன்” என்று வேண்டுவதென்? என்னில்; கேளீர்; -பாவஞ்செய்து புண்யாத்மாவாக ஆவதுமுண்டு; புண்யஞ்செய்து பாபிஷ்டனாக ஆவதுமுண்டு; தசரத சக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்னவண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று; பரமபத ப்ராப்திக்கு அநர்ஹனாய் விட்டானிறே. “சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலன் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறுபெற்றனனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்யமாகவே ஆயிற்று. ஆக விப்படி பாவஞ் செய்து புண்யசாலியாவதும், புண்யஞ் செய்து பாபிஷ்டனாவதும் உண்டாயினும், நான் பாவமேசெய்து பாவியானேன்-(அதாவது) தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவனல்லேன், சிசுபாலனைப்போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனுமல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாபிஷ்டனாக—என்கை

English Translation

I have no support, all the while doing wrong I became a sinner and knew nothing else. O’ Wonder Lord, my Madava, O Lord of Tiruvenkatam with lotus ponds where beehives on rocks overflow with honey! Freeing myself. I have come, to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்